Read in English
This Article is From Mar 27, 2019

''காங்கிரஸ் விரும்பினால் தேர்தலில் போட்டியிடத் தயார்'' : பிரியங்கா காந்தி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து மாயாவதியும், பாஜகவும் விமர்சித்துள்ளன. இதற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by
Lucknow:

காங்கிரஸ் கட்சி விரும்பினால் மக்களவை தேர்தலில் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் உத்தர பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தலில் போட்டியிவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'ஏன் போட்டியிட முடியாதா?' என்று பதில் கேள்வி கேட்ட பிரியங்கா பின்னர் 'நீங்கள்கூட போட்டியிடலாம்' என்று பதில் கூறினார். 

பின்னர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த பிரியங்கா காங்கிரஸ் கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று பதில் அளித்தார். 

Advertisement

தேர்தலில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டபோது சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரியங்காவுக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து சோனியா ஓய்வு பெறுவார் என்றும் செய்திகள் வெளியாகின. 

சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என செய்திகள் பரவின. இதனை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. 

Advertisement
Advertisement