This Article is From Mar 26, 2019

''வறுமை ஒழிப்பு திட்டம் உருவாக ரகுராம் ராஜன் உதவினார்'' : ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவதாக கூறப்படும் நியுந்தாம் ஆய யோஜனா திட்டத்தின்படி மாதம் ரூ. 12 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பத்தினருக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வரையிலும் உதவி செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

''வறுமை ஒழிப்பு திட்டம் உருவாக ரகுராம் ராஜன் உதவினார்'' : ராகுல் காந்தி

வறுமையை ஒழிப்பதற்கான இறுதிகட்ட தாக்குதலாக தங்களது திட்டம் இருக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Jaipur:

காங்கிரசின் வறுமை ஒழிப்புத் திட்டம் உருவாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உதவினார் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

நாட்டில் வறுமையை ஒழிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர், அதாவது மாதம் ரூ. 12 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு மத்திய அரசு மாதம் ரூ- 6 ஆயிரம் வரையிலும் உதவி செய்யும். 

இந்த திட்டம் வறுமையை ஒழிப்பதற்கான இறுதிக்கட்ட ஆயுதம் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலும் 25 கோடி பேர் பலன் அடைவார்கள் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் காங்கிரசின் வறுமை ஒழிப்புத் திட்டம் உருவாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார வல்லுனர்கள் உதவி செய்ததாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். 

ஆண்டுக்கு ரூ. 3.6 லட்சம் கோடி ரூபாய் இந்த திட்டத்திற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

.