This Article is From Mar 29, 2019

''பாஜகவை அகற்றி ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்'' -இயக்குனர் வெற்றி மாறன் உள்ளிட்டோர் அறிக்கை

www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் சினிமா பிரபலங்கள் கருத்துகளை தெரிவித்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

''பாஜகவை அகற்றி ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்'' -இயக்குனர் வெற்றி மாறன் உள்ளிட்டோர் அறிக்கை

கூட்டறிக்கை வெளியிட்ட 103 பேரில் வெற்றி மாறன், ஆனந்த் பட்வர்தன் உள்ளிடோரும் அடங்குவர்.

New Delhi:

பாஜகவை இந்த தேர்தலில் ஓரங்கட்டி ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்று இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட சினிமா துறையை சேர்ந்த 100-க்கும் அதிகமான பிரபலங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 
www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் 103 சினிமா பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களில் வெற்றி மாறன், ஆனந்த் பத்வர்தன், சனல்குமார் சசிதரன், சுதேவன், தீபா தன்ராஜ், குர்விந்தர் சிங் உள்ளிடோர் அடங்குவர். 
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
வரலாறு காணாத அளவில் நமது நாடு ஒரு இக்கட்டான நேரத்தில் உள்ளது. கலாசாரம், புவியியல் ரீதியாக நமக்குள் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் நாடு, இந்தியர் என்கிற அளவில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறேன். 

மிகச் சிறந்த நாடு ஒன்றில் இருப்பதை எண்ணி இந்திய குடிமக்கள் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கின்றனர். இருப்பினும், இங்கு குறிப்பிட்டவை மீது சில அதிர்வுகள் ஏற்படத் தொடங்கியுள்ளனர். ஃபாசிசம் நம் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் நாம் சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். 

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது என்பதை நாடே அறியும். அக்கட்சிக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது தேச விரோத முத்திரை குத்தப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கக் கூடிய, மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அரசை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.