Read in English
This Article is From Apr 05, 2019

''பாலகோட் தாக்குதலால் எதிர்க்கட்சிகள் தூக்கம் இழந்து விட்டன'' : மோடி கடும் தாக்கு!!

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அவர் பாகிஸ்தானை மட்டும் மையப்படுத்தி பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Advertisement
இந்தியா

பொதுக் கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி

Amroha :

பாலகோட் தாக்குதலால் எதிர்க்கட்சிகள் தூக்கம் இழந்து விட்டதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். பாலகோட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களை கேட்டு கருத்து தெரிவித்தன. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் பேசியிருக்கிறார். 

உத்தர பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 11-ம்தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. இதையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உத்தர பிரதேசத்தில் அதிக பெரும்பான்மை பெறும் கட்சி தேசிய அரசியலை தீர்மானிக்கும் என்பதால் இங்கு வெற்றி பெறுவதற்கு அரசியல் கட்சிகள் அதிக முக்கியத்துவம் காட்டுகின்றன. காங்கிரஸ் சார்பாக அதன் நட்சத்திர தலைவர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் 40 மக்களவை தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

இந்த நிலையில்  அம்ரோஹாவில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் நான் அமைதியாக இருக்க முடியுமா அல்லது தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முடியுமா? நாங்கள் பதிலடியை தேர்வு செய்தோம். தீவிரவாதிகளுக்கு அவர்களது மொழியிலேயே பதிலடி கொடுத்தோம். 

அன்றைக்கு எதிர்க்கட்சிகளுக்கும் தூக்கம் பறிபோனது. இந்த நடவடிக்கை எடுத்த என்னைப் பார்த்து பாகிஸ்தான் அரசு கேள்வி கேட்பதுபோல் எதிர்க்கட்சியினர் என்னிடம் கேள்வி கேட்டனர். 

Advertisement

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், என எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் அவர்கள் இங்குள்ள மக்களை ஆபத்தில் கொண்டு போய் சேர்ப்பார்கள். 

இவ்வாறு மோடி பேசினார். பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். 

Advertisement