This Article is From Apr 11, 2019

சோனியா காந்தியிடம் எவ்வளவு சொத்து உள்ளது தெரியுமா?! வெளியானது வேட்பு மனு விவரங்கள்!!

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

சோனியா காந்தியிடம் எவ்வளவு சொத்து உள்ளது தெரியுமா?! வெளியானது வேட்பு மனு விவரங்கள்!!

சொத்து விவரங்களை சோனியா தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Rae Bareli:

ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் சேர்மன் சோனியா காந்தி, தனது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் சேர்மன் சோனியா, தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். 

இந்த நிகழ்வின்போது, ராகுல்காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வேட்பு மனுவில் தனது கையில் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம் மட்டுமே இருப்பதாக சோனியா தெரிவித்துள்ளார். நிரந்தர வைப்பு நிதியாக ரூ. 16.59 லட்சம் இருப்பதாக சோனியா தனது சொத்து விவரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

அளித்துள்ள சொத்து விவரங்களின்படி, தபால் நிலைய சேமிப்பில் ரூ. 75 லட்சம், டெல்லியில் டெராமண்டி கிராமத்தில் சோனியாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தின் மதிப்பு ரூ. 7 கோடியே 29 லட்சம் மற்றும் இத்தாலியில் அவருக்கு உள்ள பூர்வீக சொத்தின் மதிப்பு ரூ. 7 கோடியே 52 லட்சம் ஆகியவை சோனியா காந்திக்கு இருக்கின்றன. 

ரூ. 2 கோடியே 44 லட்சத்து 96 ஆயிரத்து 405-யை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக வேட்புமனுவில் சோனியா கூறியுள்ளார். அவர் 
மகன் ராகுல் காந்திக்காக சோனியா ரூ. 5 லட்சம் லோன் வாங்கியுள்ளதாக தனது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரத்தில் சோனியா தெரிவித்துள்ளார். அவரிடம் இருக்கும் நகைகளின் மதிப்பு ரூ. 59 லட்சத்து 87 ஆயிரத்து 211. இதில் 88 கிலோ வெள்ளி பொருட்களும் அடங்கும். 
 

.