This Article is From Apr 19, 2019

''மாநில கட்சிகளும், காங்கிரசும் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கும்'' - வைகோ கணிப்பு!!

தேசிய அளவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement
இந்தியா Written by

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுவதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.

மாநில கட்சிகளும், காங்கிரசும் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தேசிய  அளவில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறான கூட்டணி அமையவில்லை. உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு மாநிலத்தை ஆண்ட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை. இங்கு வாக்குகள் பிரிந்து அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தால் காங்கிரசுக்கு சிக்கல்தான் ஏற்படும். 

மேற்கு வங்கத்திலும் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், இடது சாரிகள், காங்கிரஸ் என வாக்குகள் பிரிகின்றன. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

Advertisement

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இது ஒருதலைபட்சமான முடிவு. நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. வரப்போகிற அரசு மாநில கட்சிகளும், மாநில கட்சிகளும் இணைந்த அரசாக அமையும்.
இவ்வாறு வைகோ கூறினார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement