This Article is From Mar 28, 2019

''2023-க்குள் தமிழகத்தில் குடிசைகளே இருக்காது'' - துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு

அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

Advertisement
இந்தியா Written by

கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து ஓ.பி.எஸ். பிரசாரம் மேற்கொண்டார்.

2023-க்குள் தமிழகத்தில் குடிசைகளே இருக்காது என்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக நிர்வாகிகள் பலர் பிரசார களத்தில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலை பாராமல் கட்சி தொண்டர்களும் களப்பணியாற்றுகின்றனர். 

மைக்ரோஃபோனை பயன்படுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

வீடுகள் அற்ற ஏழை எளிய மக்களுக்கு, குடிசையில் வாழும் மக்களை கணக்கெடுத்துள்ளோம். ஏறக்குறைய சுமார் 14 லட்சம் குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. 

Advertisement

உறுதியான தரமான வீடுகள் கட்டித்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 2023-க்குள் குடிசகைள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement