This Article is From Apr 04, 2019

'சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் அதிமுக அசையாது': ஓ. பன்னீர் செல்வம் பிரசாரம்

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நீலகிரியில் பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement
இந்தியா Written by

கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தமிழகம் மற்றும் புதுவையில் 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். சுனாமி, புயல், பூகம்பம் என எது வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்றும் அவர் பேசினார். 

தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மற்ற 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. 

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது-

Advertisement

அரசு தொழிலாளர் பிரச்னை இங்கு உள்ளது. அது விரைவில் தீர்த்து வைக்கப்படும். நாட்டு மக்களைப் பற்றியே சிந்திக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ் அடாவடி செய்யும் கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. 

சுனாமி, பூகம்பம், புயல் என எது வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது. அதிமுகவை அசைக்க கருணாநிதி முயன்றார். அவரால் முடியாததை அவரது மகன் ஸ்டாலினாலும் செய்ய முடியாது. 
இவ்வாறு அவர் கூறினார். 
 

Advertisement
Advertisement