This Article is From Apr 15, 2019

''வாக்குச் சாவடியில் செல்ஃபோன்களை பயன்படுத்த வாக்காளர்களுக்கு தடை'' : தேர்தல் ஆணையம்

மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Written by

வாக்களிப்பது தொடர்பான விதிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.

வாக்குச்சாவடியில் செல்ஃபோன்களை பயன்படுத்த வாக்காளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 18-ம்தேதி நடைபெறவுள்ளது. 

இதையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரம் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. வாக்காளர்கள் 18-ம்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி முதல் வாக்களிக்கலாம். மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நேரம் மாலை 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஒரு தொகுதியில் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்கள் நாளை மாலை 6 மணிக்குள் அந்த தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். தேர்தல் தொடர்பான விளம்பரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கூடாது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்போன்களை கொண்டு செல்லலாம். ஆனால் பயன்படுத்தக் கூடாது. 

மே 19-ம்தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement