Read in English
This Article is From Nov 09, 2018

உலகப்போர் முடிவுக்கு வந்து 100 வருடம் லண்டனில் கோலாகல கொண்டாட்டம் !

பிக் பென்(Big Ben), எனப்படும் மணிக்கூண்டு, உலகப்போர் முடிந்து நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுகிழமையன்று மணி அடிக்கப்பட உள்ளது

Advertisement
உலகம்
London:

லண்டனில் அமைந்திருக்கும் உலகின் மிக பிரபலமான பிக் பென்(Big Ben), எனப்படும் மணிக்கூண்டு, உலகப்போர் முடிந்து நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுகிழமையன்று மணி அடிக்கப்பட உள்ளது.

லண்டன் நாடாளுமன்ற அதிகாரிகள் கூறுகையில், ‘பாராமரிப்பு பணிகள் எலிசபத் டவரில் (Elizabeth tower) உள்ள கிரேட் பெல் அல்லது பிக் பென்னில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கிடையே வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு உலகப்போர்களிளும் வீர மரணம் அடைந்தவர்களுக்காக இந்த மணி ஒலித்திடும்' என சின்ஹூவா பத்திரிகை தெரிவித்துள்ளது.

சரியாக 11.00 மணி அளவில் (லண்டன் நேர கணக்குபடி) ,4.5 மணித்துளி வேகத்திற்கு சரியாக 11 முறை அடிக்கும் இந்த கடிகாரம், ஆனால் வரும் ஞாயிறன்று 12.30க்கு மேலும் 11 முறை பிரிட்டனில் மட்டுமில்லாமல் உலகமெங்கும் உள்ள மணிக்கூண்டுகளில் 1918-ல் முடிவடைந்த உலகப்போரை அனுசரிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

இதன் முலம் பிரிட்டிஷ் அரசாங்கம் சரியாக போர் முடிந்து 100 ஆண்டுகளுக்கு பின் போரில் இறந்தவர்களுக்காக நன்றி தெரிவிக்க உள்ளது.

Advertisement

அங்குள்ள நாடாளுமன்றத்தின் சார்பாக பேச்சாளர் ஒருவர் கூறுகையில் வழக்கமாக இதுவரை 16 மியுசிக்கல் நோட்ஸ் கொண்டு மணி ஒலித்துக்கொண்டிருந்த நிலையில் இவ்விழாவை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த கடிகாரம் 11 முறை மட்டுமே ஒலிக்கும் என்று தெரிவித்தார்.
 

Advertisement