Read in English
This Article is From Jul 24, 2018

உலகம் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நீடிக்கும், மிக நீண்ட சந்திர கிரகனத்தை காண இருக்கிறது

ஒருவேளை நீங்கள் நிலவில் இருந்தால், பூமி சூரியனை மறைத்திருக்க முழு சூரிய கிரகனத்தை காண முடியும்

Advertisement
உலகம்
Washington:

இந்த சந்திர கிரகனம் உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களுக்கு அதிகம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், அன்றைய தினம் சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், இது சந்திரன் மிகச் சரியாக மறைக்கப்படுவதனால் ஏற்படுகிற நிகழ்வாகும் மற்றும் சூரிய ஒளியினால் சந்திரன் மிகச் சிவப்பாக தெரிகிறது.

”சந்திரன் எப்பொழுதுமே சூரியன் மற்றும் பூமியுடன் சரியான வரிசையில் இருக்காது, அதனால் தான் ஒவ்வொரு சந்திர சுழற்சிக்கும் ஒரு சந்திர கிரகனம் வருவதில்லை. நீங்கள் 350,000 கிமி அப்பால் நிலவின் பரப்பில் பூமியின் சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் நிலவின் மேல்பரப்பை வெளிச்சமடையச் செய்வதை பார்ப்பீர்கள்,” என ஆஸ்த்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் வானியலாளர் ப்ராட் டக்கர் கூறியதை சிஎன்என் மேற்கோளிட்டுள்ளது.

மேலும் ”ஒருவேளை நீங்கள் நிலவில் இருந்தால், பூமி சூரியனை மறைத்திருக்க முழு சூரிய கிரகனத்தை காண முடியும்” என தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த கிரகனம் வட அமெரிக்காவைத் தவிர உலகம் முழுவதும் தென்படும். இதை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் சிறப்பாக காண முடியும்.

Advertisement