বাংলায় পড়ুন
This Article is From Jul 14, 2020

கடவுள் ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல: சர்ச்சையை கிளப்பிய நேபாள பிரதமர்!

இதுதொடர்பாக அவரது இல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் ஒலி, இந்தியா கலாச்சார ஒடுக்குமுறை மற்றும் அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

Advertisement
இந்தியா Posted by (with inputs from ANI)

இதுதொடர்பாக அவரது இல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் ஒலி, இந்தியா கலாச்சார ஒடுக்குமுறை மற்றும் அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

Highlights

  • கடவுள் ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல: சர்ச்சையை கிளப்பிய நேபாள பிரதமர்!
  • உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது. இந்தியாவில் இல்லை
  • விஞ்ஞானத்தில் நேபாளத்தின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
Kathmandu/New Delhi:

ராமரின் பிறப்பிடமாக கோடிக்கணக்கான இந்துக்களால் நம்பப்படும் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில் அவரது பிறப்பிடம் இல்லை என்றும், காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம் என நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் தெரிவித்துள்ளார். 

அதேபோல், கடவுள் ராமர் ஒரு நேபாளி என்றும், அவர் இந்தியர் அல்ல என்றும் ஒலி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவரது இல்லத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் ஒலி, 'இந்தியா கலாச்சார ஒடுக்குமுறை மற்றும் அத்துமீறலில் ஈடுபடுகிறது. அதேபோல், விஞ்ஞானத்திற்கு நேபாளத்தின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

நாங்கள் சீதாவை இளவரசர் ராமருக்கு திருமணம் செய்து கொடுத்ததாக நம்புகிறோம். ஆனால், இளவரசரும் அயோத்தியை சேர்ந்தவரை இந்தியாவை சேர்ந்தவர் அல்ல. அந்த அயோத்தி என்பது பிர்குன்ஜ் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். தலைநகர் காட்மண்டுவில் இருந்து 135 கி.மீ தொலைவில் இந்த கிராமம் உள்ளது. 

நாங்கள் கலாச்சார ரீதியாக கொஞ்சம் ஒடுக்கப்பட்டிருக்கிறோம். உண்மைகள் அத்துமீறப்பட்டுள்ளன' என்று நேபாள செய்தி வலைதளமான சீதோபதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், நேபாளப் பிரதமர் ஒலி, உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது. இந்தியாவில் இல்லை என்றும், கடவுள் ராமர் ஒரு நேபாளி, இந்தியர் அல்ல என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

உத்தர பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து 135 கி.மீ தொலைவில் உள்ள அயோத்தி என்பது ஒரு நகரமாகும். 

ஏற்கனவே இந்தியா - நேபாளம் இடையே சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், பிரதமர் ஒலி இந்த புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

Advertisement