ராமரின் சிலை ஒற்றுமைக்கான சிலையை விட உயரமானதாக இருக்க வேண்டுமென்று அசாம் கான் கூறியுள்ளார்.
Rampur: அயோத்தியில் உள்ள ஞானிகள் ராமரின் சிலை ஒற்றுமைக்கான சிலையைப் போல இருக்கவேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து ஏ.என்.ஐயிடம் பேசிய அசாம் கான் ராமரின் சிலை கோவில் நகரத்தில் சரயு நதிக்கரை அருகில், சமீபத்தில் திறக்கப்பட்ட 182 மீட்டர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விட உயரமானதாக கட்டப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.
மேலும், ஏன் சர்தார் வல்லபாய் படேல் சிலை கட்டப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், ராமர் சிலை கட்டப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியானதும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அடுத்த வாரம் அயோத்தில் நடைபெறவிருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, இதுகுறித்த அறிவிப்பை யோகி ஆதித்யநாத் வெளியிடுவார்.
அயோத்தியாவில் உள்ள பல இந்து நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ராமரின் சில, ஒற்றுமைக்கான சிலை போன்று அமைக்கபட வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.
குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் ஒற்றுமைக்கான சிலை 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் 12 சதுர கி.மீ செயற்கை ஏரிக்கு மத்தியில், 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலை இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் மற்றும் துணை பிரதமாரான சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.