This Article is From Oct 23, 2019

பிரதமர் மோடி - பாலிவுட் நடிகர்கள் சந்திப்பில் நடந்தது என்ன? பாஜக வெளியிட்ட வீடியோ

பாலிவுட் பிரபலங்களுடன் பிரதமர் மோடியின் உரையாடலை ஒன்பது நிமிட நீளமான படமாக ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

பிரதமர் மோடி - பாலிவுட் நடிகர்கள் சந்திப்பில் நடந்தது என்ன? பாஜக வெளியிட்ட வீடியோ

டெல்லியில் பிரதமர் மோடி தனது இல்லத்தில்  பாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் சந்தித்தார்.

New Delhi:

கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி தனது இல்லத்தில்  பாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் சந்தித்தார். இந்த வீடியோவை பாஜகவின் அதிகாரப்பூர்வ கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ஷாருக் கான், அமீர்கான், சோனம் கபூர் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுப்பதும் பேசுவதும் வீடியோவில் காணப்பட்டுள்ளது. அங்கிருந்த ப்ரெஜ்டக்டரில் 150வது மகாத்மா காந்தியின் பிறந்த நாளை அறிமுகப்படுத்துகிறது. 

“உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் அதை கேட்க விரும்புகிறேன்.” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார். அடர் நீல நிற ஜாக்கெட்டில் அமீர்கான் மைக்ரோஃபோனை எடுத்து பிரதமர் மோடியின் அருகில் நிற்கிறார். 

“காந்திஜியின் ஞானம் மிகப் பெரியது மற்றும் ஆழமானது… அவரது எண்ணங்களையும் சிந்தனைகளையும் உலகத்தின் முன் இளைஞர்களின் முன் வைப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு படைப்பாளியும் தங்கள் பணியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்க முடியும்.” என்று அமீர்கான் தெரிவித்தார்.

அடுத்து ஷாருக்கான் பேசும் போது, “எங்களை அழைத்ததற்கு நன்றி, நாங்கள் நடிகர்கள் ஒருபோதும் சரியான நேரத்தில் வருவதில்லை. குறிப்பாக ஒரே இடத்தில் ஒன்றிணைவதில்லை” என்று ஷாருக்கான்  கூறினார். “காந்திந்திஜி 2.0தான் நமக்குத் தேவை” என்று அவர் கூறினார்

பாலிவுட் பிரபலங்களுடன் பிரதமர் மோடியின் உரையாடலை ஒன்பது நிமிட நீளமான படமாக ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரிக்கிறது. 

“இதற்கு முன்னர் யாரும் இந்தத் தொழிலுக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கவில்லை. அதன் மென்மையான் ஆற்றலையும் வலிமையையும் அங்கீகரித்ததில்லை. முழு தொழிற்துறை சார்பாக, பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன்.” என்று கங்கனா ரனாவத் தெரிவித்தார். 

தயாரிப்பாளர் ஏக்தா கபூரும் கலந்து கொண்டார். 

.