This Article is From Jan 10, 2019

சுட்டுப்போட்டால் தாமரை மலராது, ஓட்டுப்போட்டால்தான் தாமரை மலரும்: தமிழிசை

சுட்டுப்போட்டால் தாமரை மலராது, ஓட்டுப்போட்டால்தான் தாமரை மலரும்

சுட்டுப்போட்டால் தாமரை மலராது, ஓட்டுப்போட்டால்தான் தாமரை மலரும்: தமிழிசை

சுட்டுப்போட்டால் தாமரை மலராது, ஓட்டுப்போட்டால்தான் தாமரை மலரும். கட்டாயம் மக்கள் ஓட்டுபோடுவார்கள் தாமரை மலரும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

8ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் என்று தவறான தகவல் பரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஹிந்தி கட்டாயம் என்ற சட்டத்தை அறிவித்ததாகவும், புதிய கல்வி கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பராயிருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தொலைபேசியில் அழைத்து பேசியதாக கூறினார். அப்போது இந்த தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்வதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு விருப்பமில்லை. இதனால் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். நேர்மையான அரசியல் மற்றும் பல நல்லத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று மோடி தனது கட்சி தொடர்களுக்கு கூறியதாக அவர் தெரிவித்தார். எனவே தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்வோம் என்றார்

மேலும், ஸ்டாலின் தமிழகத்தில் சுட்டுப்போட்டாலும் தாமரை மலராது என்று கூறியுள்ளார், சுட்டுப்போட்டால் தாமரை மலராது, ஓட்டுப்போட்டால்தான் தாமரை மலரும். கட்டாயம் மக்கள் ஓட்டுபோடுவார்கள் தாமரை மலரும் என்று அவர் கூறியுள்ளார்.

.