விமான பணிப்பெண்ணுக்கு அவரது காதலன் ப்ரொபோசல் செய்த காட்சி
லவ் ப்ரொபோசல் காட்சிகளை ரசிப்பது என்பது அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் பறக்கும் விமானத்தில் இந்த நிகழ்வு நடக்கிறதென்றால் அதன் வீடியோ காட்சி எல்லோருக்கும் பிடித்துப் போகும்.
அதுபோன்ற ஒரு நிகழ்வு சீனாவில் நடந்திருக்கிறது. இங்கு பறக்கும் விமானத்தில் காதலியான பணிப்பெண்ணுக்கு காதலன் ஒருவர் ப்ரொபோசல் செய்கிறார். இந்த வீடியோ சீனாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வீடியோவில் இடம்பெற்றுள்ள பணிப்பெண்ணை சம்பந்தப்பட்ட ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பயணிகள் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news