This Article is From Jul 18, 2019

நாடு முழுவதும் 20 சதவீதம் மழைப் பொழிவு குறைந்தது! பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்

சோயா பீன்ஸ், பருத்தி வளரும் இந்தியாவின் மத்திய பகுதியில் 68 சதவீத மழைப் பொழிவு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 20 சதவீதம் மழைப் பொழிவு குறைந்தது! பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்

இந்த வாரம் சராசரிக்கு அதிகமான மழை பெய்தால் நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த வாரம் 20 சதவீதம் அளவுக்கு மழைப் பொழிவு குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சோயா பீன்ஸ், பருத்தி வளரும் இந்தியாவின் மத்திய பகுதியில் 68 சதவீத மழைப் பொழிவு குறைந்திருக்கிறது. 

இதேபோன்று மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் எதிர்பார்த்ததை விட குறைவான மழைப்பொழிவை இந்தியா அடைந்திருக்கிறது. இதனால் கோடை காலப் பயிர்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படலாம். 

ரப்பர், தேயிலை பயிரிடப்படும் கேரளாவில் 71 சதவீதம் மழைப்பொழிவு குறைந்திருக்கிறது. 

பருவமழை மூலமாகத்தான் இந்தியாவில் 55 சதவீத விவசாயம் நடைபெற்று வருகிறது. நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு மட்டும் 15 சதவீதமாக உள்ளது. கடந்த வாரம் பருவமழைக்குறைவு ஏற்பட்டிருப்பது இந்திய பொருளாதாரத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

இந்தியாவில் கடந்த ஜூன் 1-ம்தேதி பருவமழை தொடங்கியது. தற்போது வரையில் சராசரி மழைப்பொழிவை காட்டிலும் மொத்தம் 16 சதவீதம் மழையின் அளவு குறைந்துள்ளது. 

.