Subsidised cooking gas price: மானியத்துடன் சிலிண்டரின் விலை ரூ.494.35 ஆக உள்ளது.
ஹைலைட்ஸ்
- விலை குறைப்பு முடிவு சர்வதேச சந்தையில் எடுக்கப்பட்டது.
- ஒரு மாதத்திற்கு முன்பு 3.65% விலை உயர்த்தப்பட்டது.
- சிலிண்டர்கள் விலை ரூ.100.50 காசுகள் குறைக்கப்பட்டது.
New Delhi: LPG Gas Cylinder Price: மானியமில்லாத சிலிண்டர்கள் ரூ.100.50 காசுகள் குறைக்கப்பட்டு தற்போது ரூ.637க்குவிற்பனையாகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது ஏற்ற இறங்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் சிலிண்டர் ரூ.637-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமின்றி ரூ.494.35-க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது.
சர்சதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டரின் விலை 3.65 சதவீதமாக உயர்த்தப்பட்டது. விலை உயர்த்தப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விலை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.25 வரை உயர்த்தப்பட்டது.
முன்னதாக இந்த விலை உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விலை உயர்வுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடங்குவதாக அச்சுறுத்தினார். மேலும் தேர்தலுக்கு பின்பு விலை உயர்த்தப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.