This Article is From May 14, 2019

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு

தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பில் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் ஆதரவு அதிகம் திரட்டப்படுகிறது.  தமிழகத்தில் இதற்கு ஆதரவு தொடர்ந்து இருப்பதாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் விடுதலை புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க முயற்சிகள் நடப்பதாகவும் மத்திய அரசு கருதுகிறது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5  ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து. புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழித்து விட்டதாக அந்த நாடு கூறிவருகிறது. 

தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பில் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் ஒன்று கூடி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் ஆதரவு அதிகம் திரட்டப்படுகிறது.  தமிழகத்தில் இதற்கு ஆதரவு தொடர்ந்து இருப்பதாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் விடுதலை புலிகளுக்கான ஆதரவைப் பெருக்க முயற்சிகள் நடப்பதாகவும் மத்திய அரசு கருதுகிறது. 

பொது நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த தடை நீடிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த அமைப்புகள் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன என்கிற தகவல் ஏதும் இடம் பெறவில்லை. 

.