This Article is From Oct 22, 2018

வரதட்சணை கேட்ட, மணமகனுக்கு மொட்டை அடித்த பெண் வீட்டார்!

தங்க நெக்லஸ் மற்றும் பைக்கினை வரதட்சணையாக கேட்டதால், மணமகன், மணமகனின் தந்தை மற்றும் சகோதரருக்கு மணமகள் குடும்பத்தினர் மொட்டை அடித்தனர்.

வரதட்சணை கேட்ட, மணமகனுக்கு மொட்டை அடித்த பெண் வீட்டார்!

லக்னோவில் வரதட்சணை கேட்ட மணமகனுக்கு மொட்டை அடித்த மணமகள் வீட்டார். பின் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Lucknow:

மணமகனின் குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு வந்ததால், எரிச்சலடைந்த மணமகள் வீட்டார் நேற்று மணமகன், மணமகனின் தந்தை மற்றும் சகோதரருக்கு மணமகள் குடும்பத்தினர் மொட்டை அடித்தனர். இதனால் குர்ராம் நகர் பகுதியில் ஏற்பட்ட போரட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதன் பிறகு மணமகள் வீட்டார் போலீஸ் புகார் கொடுத்தனர். 

மணமகனின் குடும்பத்தினர் கடந்த ஒரு வாரமாக, வரதட்சணை பொருட்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டே சென்றதாக, காய்கறி வியாபாரியான மணமகளின் தந்தை கூறினார். 
 

 

இதுகுறித்து மணமகளின் பாட்டி ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பைக் மற்றும் தங்க நெக்லஸ் வேண்டுமென்று மணமகன் வீட்டார் கேட்டனர். எங்களால் அதை கொடுக்க முடியாது என்று கூறியதும், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். யார் அவர்களுக்கு மொட்டை அடித்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார். 

உள்ளூர் செய்தி தொடர்பாளர்கள் பேசுகையில், ஏற்கனவே மணமகனுக்கு, மணமகள் வீட்டார் சார்பில் பைக் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு அந்த வண்டி பிடிக்காததால் வேறு பைக்கினை கேட்டுள்ளார். மணமகளின் தந்தை வேறு பைக் வாங்கி தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு, திருமணத்தன்று தங்க நெக்லஸ் வேண்டுமென்று கேட்டுள்ளனர். இதனால் எரிச்சலடைந்த மணமகள் வீட்டார் அருகில் உள்ள பூங்காவிற்கு மணமகனின் குடும்பத்தாரை அழைத்துச் சென்று மொட்டை அடித்த பின் போலீஸில் ஒப்படைத்துள்ளனர். 

மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மது அருந்திவிட்டு தங்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.

.