Lucknow: லக்னோவில் சாலை விதிகளை மோட்டார் வாகன ஓட்டிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக போக்குவரத்து காவலர்கள் புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
‘மரணத்தின் கடவுள்' என்றழைக்கப்படும் எமனைப் போல வேடமிட்ட நபர் ஒருவர் சாலையோரமாக நின்றுகொண்டு வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிமுறைகளை சரிவர பின்பற்ற அறிவுறுத்தினார்.
பல வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தொடர்ந்து இத்தகைய புதிய செயல்முறையை காவல் துறையினர் செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.
இம்ரான் கான் என்னும் இந்த நபர், மக்களிடையே தன்னை விரைவில் சந்திக்க வேண்டாம் (எமனை சந்திக்க வேண்டாம்) என்றால் சரியானபடி சாலை விதிகளை கவனத்தில் கொண்டு வாகனத்தை ஓட்டுமாரு கேட்டுக்கொண்டார்.
இம்ரானுடன் மேலும் சிலர் சில முக்கியமான சாலை விதிகளை ஃபோர்டுகளில் எழுதிக்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
'எங்களது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். மேலும் எமனை நேரில் காண விரும்பாதவர்கள் தாங்களாகவே விதி மீறல்களை நிறுத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு' என இம்ரான் தெரிவித்தார்.
மேலும் இது போன்ற ஒரு முயற்சி பெங்களூரிலும் நடந்து, அங்குள்ள மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.