ஆன்டோனிஸ் சர்வதேச திடக்கழிவு கழகத்தின் தலைவரான இவர் இந்த விமானத்தில் ஐநா நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்ள நைரோபிக்கு செல்லவிருந்தார்.
ஹைலைட்ஸ்
- 157 பேர் பயணம் செய்த எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானது
- ஐநா நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்ள நைரோபிக்கு செல்லவிருந்தார் அவர்
- கேட் மூடப்பட்டு இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார்
கிரீஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் ஞாயிறன்று விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் பயணிக்க வேண்டியவர். ஆனால் கடைசி நிமிடத்தில் விமானம் கிளம்புவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன் விமானநிலையத்துக்குள் வந்ததால் விமானத்தை தவறவிட்டார்.
"நான் சரியான நேரத்துக்கு கேட்டை வந்து அடைய யாருமே உதவவில்லை" என்றார் அன்டோனிஸ் என்ற பயணி. இந்த விபத்துக்கு பின் தனது ஃபேஸ்புக் பதிவில் எத்தியோப்பிய விமான டிகெட்டையும் பதிவிட்டு எனது அதிர்ஷ்டமான தினம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆன்டோனிஸ் சர்வதேச திடக்கழிவு கழகத்தின் தலைவராவார். அவர் இந்த விமானத்தில் ஐநா நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்ள நைரோபிக்கு செல்லவிருந்தார்.
அவர் இந்த விமானத்தில் பயணித்திருக்க வேண்டியவர். புறப்பாடு பகுதிக்கு கேட் மூடப்பட்டு இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார்.
இதற்கிடையே விமான நிலைய அதிகாரியிடம் நான் முறையிட்ட போது அவர் என்னை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார் என்று கூறிய ஆன்டோனிஸ், அந்த காவலர் என்ன போராடாதீர்கள், கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணிக்காத ஒரே பயணி நீங்கள் தான் என்று கூறியதை தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி விமான நிலைய அதிகாரிகள் அவரை விசாரித்ததாகவும், ஏனேனில் அவர் மட்டும் தான் அந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்பதே அதற்கு காரணம் என்றும் கூறினர்.
எனது அடையாள விவரங்களை சோதனை செய்வதில் தாமதமானதே நான் விமானத்தை தவறவிட காரணம் என்றார்.
விமானம் கிளம்பிய 30 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானது. இதில் 30க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.