“லக்” அல்லது அதிர்ஷ்டம் என்பது ஒருவருக்கு ஒருமுறை அடிப்பதே கடினம் என்ற நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸ்சியை சேர்ந்த ராபர்ட் ஸ்டிவார்ட்க்கு (Robert stewart) ஸ்கிராட்ச் கார்டு எனப்படும் லாட்டரி விளையாட்டின் மூலம் ஒரே நாளில் மூன்று முறை அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
இதன் மூலம் ரூபாய் 50 லட்சம் லாட்டரி அவருக்கு அடித்து குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஓய்வு பெற்ற யூனியன் ஓட்டுனரான ராபர்ட்டுக்கு, லாட்டரி அடித்தவுடன் உடனடியாக அங்குள்ள கடைக்கு சென்று மேலும் இரண்டு கார்டுகளை வாங்கினார். இம்முறையும் அவருக்கே லாட்டரி அடித்தது. அதன் முலம் கூடுதலாக 500 மற்றும் 100 டாலர்கள் ராபர்ட்க்கு கிடைத்தது.
ஸ்டிவார்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி 50 லட்சத்தை வென்ற செய்தி அங்குள்ள மக்களுக்கு தெரியவில்லை, இரண்டு மாதங்கள் கழித்து நவம்பரில் மக்களிடையே இந்த செய்தி பரவியது. இந்த வெற்றிக்கு முன் 2500 டாலர்களை ராபர்ட் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பணத்தை வைத்து தனது குடும்பதிற்க்கு உதவ போவதாக ஸ்டிவார்டின் கூறினார்.
இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதம் சிட்னியை சேர்ந்த ஒருவர் 20 லட்சம் வென்றபோது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.