This Article is From Jul 14, 2018

ஜூலை 27ல் நிகழ இருக்கும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம்

1 மணி நேரம் 43 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.

ஜூலை 27ல் நிகழ இருக்கும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம்
New Delhi:

வருகிற ஜூலை 27ம் தேதி இரவு தொடங்கி, 28ம் தேதி அதிகாலை வரை நிகழ இருக்கும் சந்திர கிரகணம் தான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை சந்திரன் மீது படாமல பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

வருகிற ஜூலை 27ம் தேதி இந்த ஆண்டிற்கான இரண்டாவது சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதுகுறித்து புவியியல் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி நிகழ்ந்த நிலையில், அடுத்த சந்திர கிரகணம் ஜூலை 27ம் தேதி நிகழ உள்ளது.

இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இது. சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவப்பாக இருள் படந்து காணப்படும்.  1 மணி நேரம் 43 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.

 

.