அக்பருடன், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தருண் தேஜ்பாலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
New Delhi: தேசிய அளவில் பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்களின் சங்கமான “எடிட்டர்ஸ் கில்டு”வெளியிட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியலில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவியை ராஜினாமா செய்த எம்.ஜே. அக்பரின் பெயர் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறை தண்டனை பெற்ற தருண் தேஜ்பால் மற்றும் கவுதம் அதிகாரி ஆகியோரின் பெயர்களும் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பருக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்ததை தொடர்ந்து அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான தருண் தேஜ்பாலின் பெயரும் எடிட்டர்ஸ் கில்டு பட்டியலில் உள்ளது. அவர் தனது சக பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்தது. இதையடுத்து அவருக்கு கோவா நீதிமன்றம் சிறை தண்டனை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.