This Article is From May 15, 2019

“97 + 22 எவ்ளோ..?”- கணக்கு போட்டு பிரசாரம் செய்யும் ஸ்டாலின்!

வருகின்ற மே 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், அரவரக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது

“97 + 22 எவ்ளோ..?”- கணக்கு போட்டு பிரசாரம் செய்யும் ஸ்டாலின்!

முன்னதாக ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் இடையில் கருத்துப் போர் நடந்தது.

வருகின்ற மே 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், அரவரக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இப்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, வித்தியாசமான முறையில் பேசியுள்ளார். 

ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் சண்முகையா களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக நேற்றிரவு வாக்கு சேகரித்தார் ஸ்டாலின். அப்போது, “நம்மிடம் இப்போது இருப்பது 97 சட்டமன்ற உறுப்பினர்கள். ஏற்கெனவே நடந்திருப்பது 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல். இப்போது நடக்கவிருப்பது 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல். இரண்டையும் கூட்டினால் 22. 

97-யும் 22-யும் கூட்டினால் வருவது 119. தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவை 118 இடங்கள்தான். எனவே, நமக்கு ஒரு தொகுதி கூடுதலாகவே கொடுக்கப்பட்டுள்ளது. மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் அமையப் போவது திமுக ஆட்சிதான். கழக ஆட்சிதான்” என்று பிரசாரம் செய்தார். 

முன்னதாக ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் இடையில் கருத்துப் போர் நடந்தது. செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை, “பாஜக-வுடனும், ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது உண்மைதான். அவர் இங்கேயும் ஒரு இடத்தைப் போட்டு வைக்கப் பார்க்கிறார்” என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய ஸ்டாலின், “நான் மட்டும் பாஜக-வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால், தமிழிசையும் மோடியும் அரசியலை விட்டு விலகத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 

.