This Article is From Mar 23, 2019

‘அன்புமணியிடம் கவர்ச்சியும் கம்பீரமும் போய்விட்டது?’- தர்மபுரியில் ஸ்டாலின் பேச்சு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது

Advertisement
இந்தியா Written by

ஏப்ரல் 18 அன்று, காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது

தர்மபுரியில் இன்று பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை கேள்விகளால் துளைத்தார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இன்று ஸ்டாலின், தர்மபுரியின் அரூரில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். 

அப்போது அவர், ‘நமது பெரிய அய்யா, தமிழகத்தில் முகம் சுழிக்காத ரீதியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மக்கள்தான் முகம் சுழிக்கிறார்கள். நீங்கள் ஏன் சுழிக்கப் போகிறீர்கள். பணம் கொடுத்து முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி குத்தகைக்கு எடுத்திருக்கிறார் என்று பெரிய அய்யா முன்னர் சொன்னார். 

ஆனால் இப்போதோ, ஒரு ஆதாயத்திற்காக எடப்பாடி ஆட்சியைப் புகழக் கூடிய புலவராக மாறியுள்ளார் ராமதாஸ். பாமக தொண்டர்களே அதிமுக-வுடன் அவர்கள் வைத்ததை ஏற்றுக் கொள்ளவில்லை. இதைக் கண் கூடாக செல்லும் இடமெல்லாம் பார்க்கிறோம். 

Advertisement

டாக்டர் அன்புமணி, எப்போதும் கவர்ச்சியாகவும் கம்பீரமாகவும் இருப்பார். ஆனால், இப்போது அவர் முகத்தைப் பாருங்கள். கம்பீரமும் இல்லை, கவர்ச்சியும் இல்லை, அந்த வேகமும் இல்லை, அந்தத் துடிப்பும் இல்லை. ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்று எல்லா இடத்திலேயும் போஸ்டர் அடித்து ஒட்டினார். ஆனால், இன்றைக்கு அவருடைய நிலை என்ன..?

டயர நக்குனுவங்க என்று சொன்னது யார். எடப்பாடியையும் ஒபிஎஸ்-யும் அன்புமணி டயர் நக்கி என்று சொன்னார். டயர் நக்கி அருகில் நின்று ஓட்டுக் கேட்டுக் கொண்டு வருகிறீர்களே, வெட்கமாக இல்லையா?' என்று பேசினார்.

Advertisement
Advertisement