This Article is From Nov 20, 2018

‘முதலமைச்சர்க்குள்ளும் ஒரு நீரோ இருக்கிறான்!’- வீடியோ வெளியிட்டு கண்டித்த மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார்

Advertisement
தெற்கு Posted by

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார். தற்போது டெல்டா பகுதிகளில் அவர் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து வருகிறார்.

நேற்று அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்துக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது முதல்வரை வரவேற்க ஆளுங்கட்சித் தரப்புப் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்ததாக தெரிகிறது. இதை வீடியோவாக எடுத்து சிலர் பதிவிட, தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அதைப் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

  .  

இது குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், ‘ரோம் நகரம் பற்றியெறிந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததாகச் சொல்வார்கள்'. நம்முடைய இதயமில்லாத முதலமைச்சர் எட்டிப்பார்க்காத பழனிசாமிக்குள்ளும் ஒரு நீரோ இருக்கிறான்.கோரப் புயல் பாதித்து 72 மணி நேரத்தை கடந்தும், பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் முதலமைச்சர் சந்திக்கவில்லை. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை, உடைமைகளை இழந்திருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரோ தன் சொந்த ஊரில் ஆட்டம், பாட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். கொண்டாட்டத்திற்கும், கேளிக்கைக்கும் இது நேரமில்லை என்பதை முதல்வர் உணர வேண்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement