This Article is From Jan 30, 2019

‘போராட்டத்தைத் திரும்பப் பெருக!’- அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை

‘முதல்வரைப் பார்க்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

Advertisement
தமிழ்நாடு Posted by

தி.மு.கழக ஆட்சி அமையும் வரை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்கவும், ஸ்டாலின்

Highlights

  • 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
  • 1000 ஆசிரியர்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
  • கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது, தமிழக அரசு திட்டவட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று தமிழக அரசு சார்பில், '95 சதவிகித ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள்' என ஒரு புள்ளி விவரம் அளிக்கப்பட்டது. இதை ஜாக்டோ-ஜியோ தரப்பு மறுத்துள்ளது. 

‘முதல்வரைப் பார்க்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்' என்று சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ‘என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். முதல்வரை சந்திக்க முடியாது' என்று ஆளும் தரப்பு உதாசீனப்படுத்தியுள்ளது. இந்த முரணால், ஒரு வாரத்துக்கும் மேலாக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

இப்படிப்பட்ட சூழலில் தமிழக எதிர்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், ‘அடாவடி அ.தி.மு.க அரசு அராஜகத்தையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே நம்பியிருப்பதால் மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

Advertisement

தி.மு.கழக ஆட்சி அமையும் வரை நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்கவும். கழக ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதோடு, அ.தி.மு.க அரசு எடுத்த அராஜக நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்' என்று கூறியுள்ளார். 

Advertisement