This Article is From Jul 31, 2018

கருணாநிதி நலமாக உள்ளார் - நேரில் சந்தித்த ராகுல் காந்தி தகவல்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்

கருணாநிதி நலமாக உள்ளார் - நேரில் சந்தித்த ராகுல் காந்தி தகவல்
Chennai:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அவரைக் காண காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

கருணாநிதியை நேரடியாக சந்தித்த அவர், பின் செய்தியாளர்களிடம் பேசினார்.  "கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. அவர் நலமாக இருக்கிறார். அவரது உடல் நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். எங்களுக்கும் தி.மு.கவுக்கும் கருணாநிதிக்கும் நீண்ட கால நட்புறவு உள்ளது. தமிழக மக்களைப் போலவே அவர் மிகவும் உறுதியானவர் " என்றார்.

கருணாநிதி விரைவில் குணமடைய சோனிய  காந்தியும் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, முக்குல் வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

.