This Article is From Oct 18, 2019

இங்கு Top டூ Bottom எல்லாம் Robots-தான்; வியக்கவைக்கும் இந்திய Restaurant!

Robot Restaurant- வாடிக்கையாளர்களை வாழ்த்துவதற்கும், உணவு விடுதிக்கு வரவேற்பதற்கும் ரோபோக்கள் குரல் இயக்கப்படும் அமைப்பைக் கொண்டுள்ளன.

இங்கு Top டூ Bottom எல்லாம் Robots-தான்; வியக்கவைக்கும் இந்திய Restaurant!

Robo Chef இந்த உணவகத்தின் பெயர்

Bhubaneswar:

வெளியே உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது என்பது பல்வேறு வகையான உணவு வகைகளை முயற்சிப்பதற்காக மட்டுமல்ல... ஒரு சிறந்த சூழ்நிலை, மரியாதையான சேவை மற்றும் சுவையான உணவு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த அனுபவத்திற்காகவும்தான்.

அதன் அடிப்படையில், ஒரு புதுமையான உணவு அனுபவத்தை வழங்கும் முயற்சியில், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரத்தைச் சேர்ந்த உணவகம் வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்க ரோபோக்களை பணியில் அமர்த்தியுள்ளது. 

Robo Chef எனும் இந்த உணவகம், ரோபோக்களைக் கொண்டே முழு சேவையையும் வழங்கும் முதல் உணவகமாக உள்ளது. இந்த ரோபோக்கள் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மாறுபட்ட முயற்சியின் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட உணவகத்தின் உரிமையாளர் ஜீத் பாசா, "நாங்கள் இந்த ரோபோக்களை சம்பா மற்றும் சமேலி என்று பெயரிட்டுள்ளோம். அவை இரண்டும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. நாங்கள் கிழக்கு இந்தியாவின் முதல் ரோபோ உணவகம்" என்று கூறினார்.

மேலும், தனது உணவகமே இந்தியாவின் முதல் non-line followers robot கொண்டு இயங்கும் உணவகம் என்றும் அவர் கூறுகிறார்.

"இந்த ரோபோக்கள் குறிப்பிட்ட பாதை இல்லாமல், ராடாரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. அவை கட்டளைப்படி செயல்படுகின்றன. மேலும், இந்த ரோபோக்களால் ஓடியா உட்பட எந்த மொழியையும் பேச முடியும்" எனவும் பாசா கூறினார்.

வாடிக்கையாளர்களை வாழ்த்துவதற்கும், உணவு விடுதிக்கு வரவேற்பதற்கும் இந்த ரோபோக்களில் குரல் இயக்க அமைப்பு (voice-operated system) உள்ளது.

உணவகத்தில் உணவருந்திய மக்களும் புதுவித அனுபவத்தால் மகிழ்ச்சியடைவதோடு, இந்த தனித்துவமான யோசனையைப் பாராட்டி வருகின்றனர்.

Click for more trending news


.