Read in English
This Article is From Nov 05, 2018

ம.பி. முன்னாள் அமைச்சரும், பாஜக வேட்பாளருமான தேவ்சிங் படேல் காலமானார்

மத்திய பிரதேசத்தில் ராஜ்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு தேவ்சிங்கின் பெயரை பாஜக அறிவித்திருந்தது.

Advertisement
இந்தியா

உமாபாரதி முதல்வராக இருந்தபோது ம.பி.-யின் அமைச்சராக தேவ் சிங் இருந்துள்ளார்.

Barwani :

மத்திய பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், ராஜ்பூர் சட்டசபை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தேவ் சிங் படேல் இன்று காலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். அவருக்கு ஒரு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஓம் சோனி அளித்த பேட்டியில், தேவ் சிங்கிற்கு அவ்வப்போது நெஞ்சுவலி வரும். பின்னர் குணம் அடைந்து விடுவார். ஆனால் இன்று காலையில் நான் அவருடன் இருந்தபோது உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்தார். இதன்பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம்.சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தார்.

எஸ்.டி. தனித் தொகுதியான ராஜ்பூரில் இருந்து போட்டியிடுவதற்காக தேவ்சிங்கை பாஜக கடந்த 2-ம்தேதி அறிவித்தது. மத்திய பிரதேச முதல்வராக உமா பாரதி இருக்கும்போது, அவரது அமைச்சரவையில் தேவ்சிங் படேல் இடம்பெற்றிருந்தார்.

1990-ல் அவர் முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வானார். பின்னர் 1998, 2003 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று அவர் எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு சென்றார்.

Advertisement
Advertisement