கார்த்திகே சவுகான், ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்
Bhopal: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேச தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் ராகுல், ‘பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிவராஜ் சிங் சவுகானின் மகள், கார்த்திகே சவுகானின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்' என்று ஆவேசமாக பேசினார். இதற்கு சிவராஜ் சிங் சவுகான், குற்றச்சாட்டை மறுத்து ராகுலிடம் மன்னிப்பு கோரினார். மேலும் கார்த்திகே, ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல், ‘பிரசாரத்தின் போது குழப்பத்தில் கார்த்திகேவின் பெயரைச் சொல்லிவிட்டேன்' என்று விளக்கம் அளித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுகான், ‘ராகுல் காந்தி என் மகன் குறித்து தவறான தகவலை சொன்னார். குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் ஆதாரம் கேட்டவுடன், குழப்பமடைந்துவிட்டதாக தெரிவிக்கிறார். இதைப்போல் குழப்பமடைந்து கொண்டே இருந்தால், நாட்டை எப்படி வழி நடத்துவீர்கள்?' என்று கேட்டுள்ளார்.
வரும் நவம்பர் 28 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் பாஜக தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.