This Article is From Nov 04, 2018

ம.பி. தேர்தலில் போட்டியிடும் 155 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மத்திய பிரதேச எதிர்க்கட்சி தலைவர் அஜய் அர்ஜுன் சிங் அவரது சொந்த தொகுதியான சிதி மாவட்டம் சுர்ஹாத்தில் இருந்து போட்டியிடுகிறார்

ம.பி. தேர்தலில் போட்டியிடும் 155 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை

New Delhi:

மத்திய பிரதேச தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 155 வேட்பாளர்களை முதல்கட்டமாக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கட்சியின் முக்கிய தலைவர்களான ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

மத்திய பிரதேச எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் அஜய் அர்ஜுன் சிங் சிதி மாவட்டம் சுர்ஹாத் தொகுதியில் போட்டியிடுகிறார். 1998-ம் ஆண்டில் இருந்து அவர் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

காங்கிரசின் தேசிய செயலாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஜிது பத்வாரி இந்தோர் மாவட்டம் ராவு தொகுதியிலும், மூத்த தலைவர் சுரேஷ் பச்சோரி ரைசன் மாவட்டம் போஜ்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் இன்னும் 75 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

மத்திய பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முகங்களாக ஜோதிராதித்ய சிந்தியாவும், கமல்நாத்தும் உள்ளனர். இந்த தேர்தலில் இருவரின் ஆதரவாளர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

மத்திய பிரதேச விவகாரங்களை கவனிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், வீரப்ப மொய்லி மற்றும் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

.