Read in English
This Article is From May 28, 2020

மத்திய பிரதேசத்தில் கடும் வெயிலால் மயக்கமடைந்த சுகாதார பணியாளர்!

பிரஜபதி முழு ஊடல் பாதுகாப்பு கவசத்தை அணிந்துள்ளார். இவர் பிஎம்சி மையம் அருகே சென்ற போது கடுமையான வெயில் தாங்காமல், மயக்கமடைந்து விழுந்துள்ளார். கிட்டதட்ட அரை மணி நேரமாக அவர் அங்கேயே இருந்துள்ளார்.

Advertisement
இந்தியா Posted by

மத்திய பிரதேசத்தில் இதுவரை 7,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sagar, Madhya Pradesh:

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவி வந்த சுகாதாரப் பணியாளர் ஒருவர் பணியிலிருந்த போது, மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அவர் 44 டிகிரி செல்ஸியஸ் வெயிலில் பயணித்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்படி செல்லும் போது, மயக்கமடைந்த அவர், சுமார் 25 நிமிடங்களாக சாலையோரம் கிடந்துள்ளார். 

108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநருடன் உடனிருந்தவர் சுகாதார பணியாளர் ஹிர்லால் பிரஜபதி, இவர் டிபி மருத்துவமனையில் இருந்து, பந்தல்காந்த் மருத்துவமனைக்கு கொரோனா நோயாளியை அழைத்துச்செல்ல உதவிசெய்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு அவர் மயக்கமடைந்துள்ளார். 

இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்கள் அளித்த தகவலின் படி, பிரஜபதி முழு ஊடல் பாதுகாப்பு கவசத்தை அணிந்துள்ளார். இவர் பிஎம்சி மையம் அருகே சென்ற போது கடுமையான வெயில் தாங்காமல், மயக்கமடைந்து விழுந்துள்ளார். கிட்டதட்ட அரை மணி நேரமாக அவர் அங்கேயே இருந்துள்ளார். 

Advertisement

இதைத்தொடர்ந்து, அவரது சக ஊழியரான, ஆம்புலன்ஸ் டிரைவர், அவரை அனுமதிக்குமாறு பி.எம்.சி அதிகாரிகளிடம் மன்றாடியுள்ளார். இறுதியில், பி.எம்.சி சுகாதார ஊழியரை கவனித்துக் கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து, அவரை மற்ற துணை மருத்துவ ஊழியர்கள், தனது சொந்த ஆம்புலன்சில், மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அவர் சிகிச்சை பெற்ற பின்னர்,  தற்போது, குணமடைந்து இப்போது நிலையான நிலையில் உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இதுவரை 7,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 313 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரம் நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகர்ப்புறங்களில் ஒன்றாகும், அங்கிருந்து மட்டும் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 78 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதாக தலைமை மருத்துவ அதிகாரி பிரவீன் ஜாடியா தெரிவித்துள்ளார்.

Advertisement

நேற்று வெளியிடப்பட்ட உத்தரவில், வீட்டு தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இரண்டாவது முறையாக விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டவர்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதைத் தவிர்த்து, வெட்டுக்கிளிகள் நிற்கும் பயிர்களைத் தாக்கி அழிக்கும் அச்சுறுத்தலை மத்தியப் பிரதேச நிர்வாகமும் எதிர்கொள்கிறது.

Advertisement

செஹோர் மாவட்டத்தின் புட்னி மற்றும் நஸ்ருல்லகஞ்ச் பகுதிகளில் உள்ள விவசாயிகள் வெட்டுக்கிளிகளை விரட்ட வேளாண்மைத் துறையின் அறிவுறுத்தலின் படி பாத்திரங்களை அடிப்பதைக் காண முடிந்தது.

கடந்த வாரம் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வெட்டுக்கிளிகள் பெரியளவில் நுழைந்தன. இவை விரைவில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தானிய பயிர்களை அழிக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement