Read in English
This Article is From Mar 13, 2020

இந்த நாள் எனக்கு உணர்ச்சிவசமான நாள்: சிந்தியா

ஹோலியின் போது அரசாங்கம் வீழ வேண்டும் என்று பா.ஜ.க விரும்பியதால் பாஜக இந்த நடவடிக்கைக்கு "ரங்கபஞ்சாமி" என்று பெயரிட்டது.

Advertisement
இந்தியா Posted by (with inputs from ANI)

வியாழக்கிழமை போபால் வந்த சிந்தியாவை வரவேற்றபோது

Bhopal:

மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால் பா.ஜ.க அலுவலகத்திற்கு முதல்முறையாக வியாழக்கிழமை வருகை புரிந்த ஜோதிராதித்யா சிந்தியா, இந்த நாள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான நாள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் பா.ஜ.க குடும்பத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, பிரதமர் மோடி, ஜே.பி நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோரிடமிருந்து ஆசீர்வாதத்தையும் பெற்றதாக குறிப்பிட்டார்.

முன்னதாக வியாழக்கிழமை போபாலில் தரையிறங்கிய சிந்தியா, பெரிய அளவிலான ஆதரவாளர்கள் கூட்டத்தினரால் வரவேற்கப்பட்டார். இப்போது காங்கிரஸ் தங்களில் ஒரு தலைவரை இழந்துவிட்டது. இருப்பினும், அவரது விலகலால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சிந்தியாவுக்கு கருப்பு கொடிகள் காட்டப்பட்டன.

“இன்று எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நாள். இந்த குடும்பம் (பாஜக) அதன் கதவுகளை எனக்குத் திறந்துவிட்டது என்பதையும், பிரதமர் மோடிஜி, ஜேபி நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதையும் நான் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்,” என சிந்தியா பேசியிருந்ததாக ANI செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

Advertisement

மேலும், "இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான நாள், ஏனென்றால் நான் 20 ஆண்டுகள் ஒரு அமைப்போடு கழித்திருக்கின்றேன்... நான் எனது கடின உழைப்பை அந்த அமைப்புக்குச் செலுத்தியிருக்கின்றேன்... நான் அதை விட்டுவிட்டு என்னை உங்களிடம் ஒப்படைக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்தியப் பிரதேச குணா தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிந்தியா பா.ஜ.கவில் இணைந்த பிறகு, அம்மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ஆகியோருடன் இரவு உணவை ஒன்றாக இணைந்து உண்ட வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.

மூத்த தலைமையுடன் பல மாதங்களாக அதிருப்தியிலிருந்த சிந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை தனது கட்சியான காங்கிரஸிலிருந்து விலகி, நேற்று பாஜகவில் சேர்ந்தார். "வெறுப்பு அரசியலை" பரப்பியதற்காக பாஜகவை அவர் விமர்சித்த இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

சிந்தியாவுடன் இணைந்து 21 எம்.எல்.ஏக்களும் இந்த முடிவினை மேற்கொண்டதால் இது கமல்நாத் அரசாங்கத்தைச் சரிவுக்கு அருகில் கொண்டுசென்றுவிட்டது. பாஜக தலைவராகத் தனது முதல் சில கருத்துக்களில், சிந்தியாவும் கட்சியின் அணிகளுக்குள் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். காங்கிரஸை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதில் பாஜக வெற்றி பெற்றால் நான்காவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்க வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சவுகானையும் அவர் பாராட்டினார்.

தங்கள் காரில் ஏ.சி.யைப் பயன்படுத்தாத இரண்டு தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள் அது சிவராஜ் சிங் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியாதான். நீங்கள் (கட்சித் தொழிலாளர்கள்) 1, நாங்கள் (தலைவர்கள்) 1 என்பது எனது நம்பிக்கை. நீங்கள் 1 மற்றும் 1 ஐ ஒன்றாக இணைக்கும்போது, ​​அது 11 ஆக இருக்க வேண்டும், 2 ஆக இருக்கக்கூடாது ”என்று சிந்தியா இந்தியில் அறிவித்தார்.

நேற்று பாஜகவில் அவர் நுழைந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு சவுகான், "சிவராஜிலிருந்து மகாராஜை வரவேற்கிறோம்" என்று சிந்தியாவைப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

Advertisement

பாஜக எம்எல்ஏ நரோட்டம் மிஸ்ரா மற்றும் சவுகான் ஆகியோர் மத்தியப் பிரதேச அரசாங்கத்தை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டதாகக் கடந்த வாரம் வட்டாரங்கள் என்டிடிவிக்கு தெரிவித்தன. ஹோலியின் போது அரசாங்கம் வீழ வேண்டும் என்று பா.ஜ.க விரும்பியதால் பாஜக இந்த நடவடிக்கைக்கு "ரங்கபஞ்சாமி" என்று பெயரிட்டது.

சிந்தியா ராஜினாமா செய்து பாஜகவில் சேர முடிவெடுத்தது காங்கிரசின் பழைய தலைவர்களிடமிருந்து கடும் பதிலுக்கு வழிவகுத்தது, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் அவரை "சுய மகிழ்ச்சிக்கான அரசியல் நோக்கங்களுடைய" ஒரு தலைவர் என்று அழைத்தார்.

Advertisement

சிந்தியாவின் நடவடிக்கை காங்கிரஸ் கட்சியில் தலைமுறைகளுக்கு இடையிலான பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது.

Advertisement