மேளங்கைளை சத்தமாக வாசித்தும், பாத்திரங்களை கொண்டு சப்தங்களை உருவாக்கியும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை தடுக்க முயற்சிக்குமாறு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Bhopal: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தற்போது, வட மாநிலங்கள் வேறு ஒரு புதிய சாவலை எதிர்கொண்டுள்ளன. ராஜஸ்தானின் பல பகுதிகளில் அழிவை ஏற்படுத்தி பயிர்கள் மற்றும் மரங்களை அழித்த பின்னர், பாலைவன வெட்டுக்கிளிகள் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங்கின் தொகுதியான செஹூரில் புத்னியில் நுழைந்துள்ளது. இது அம்மாநிலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவு இது தற்போது பெரிய சவாலாக முன்னெழுந்துள்ளது. பாலைவன வெட்டுக்கிளியின் இந்த படையெடுப்பானது மழைக்காலம் வரை தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தின் வழியாக நுழைந்த வெட்டுக்கிளி பூச்சிகள், பின்னர் மால்வா நிமரின் சில பகுதிகளுக்குச் சென்று இப்போது போபாலுக்கு அருகில் உள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க மாநில வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
மேளங்கைளை சத்தமாக வாசித்தும், பாத்திரங்களை கொண்டு சப்தங்களை உருவாக்கியும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை தடுக்க முயற்சிக்குமாறு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பூச்சிகள் எங்கு வேண்டுமானாலும் தாக்குதளில் ஈடுபடலாம் எனவே விழிப்புடன் இருந்து அவற்றை கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசின் குழுக்களும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களை சமாளிக்க டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் ரசாயன ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்த முயன்று வருகின்றன.
இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்தப்படாவிட்டால், மாநிலத்தில் செழிப்பாக வளர்ந்துள்ள சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பாசிப்பயிரினை வெட்டுக்கிளிகள் அழித்துவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இதனை கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பருத்தி மற்றும் மிளகாய் பயிர்களும் சேதமடையக்கூடும் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முதலில் ராஜஸ்தான் வழியாக பரவிய இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது அது செல்லும் வழியெல்லாம் பலத்த சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.