Read in English
This Article is From Sep 25, 2018

மத்தியப் பிரதேசத்தில் காகங்களுக்காக கட்டப்பட்டுள்ள பிரத்யேக பூங்கா!

முக்திதம் சேவா சமிதி என்ற அமைப்பினர், காகங்களுக்கான பிரத்யேக பூங்கா ஒன்றை தொடங்கியுள்ளனர்

Advertisement
இந்தியா

முக்திதம் சேவா சமிதி என்ற அமைப்பினர், காகங்களுக்கான பூங்காவை தொடங்கியுள்ளனர்

Vidisha (Madhya Pradesh):

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள விதிசா நகரில் முக்திதம் சேவா சமிதி என்ற அமைப்பினர், காகங்களுக்கான பிரத்யேக பூங்கா ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பூங்காவை தொடங்க பணியாற்றிய அமைப்பை சேர்ந்த தலைவர் பேசுகையில், காகங்களை பாதுகாக்க நினைத்து இந்த பூங்காவை கட்டியுள்ளோம். காகங்கள் அறிவியல் பூர்வமாகவும், மத ரீதியாகவும் முக்கியமானது என்று தெரிவித்தார். மேலும் காகங்கள் உணவு மற்றும் தண்ணீர் அருந்தும் வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இந்து மதத்தில் காகங்களுக்கு முக்கியத்துவம் உள்ளதாகவும், காகங்களுக்கு உணவு அளிப்பது சிறந்த பண்பாகும் என்று அப்பகுதி கவுன்சிலர் தினேஷ் தெரிவித்துள்ளார்

காகங்களுக்காகவே பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement