This Article is From Mar 11, 2020

'காங்கிரசுக்குள் இருந்துகொண்டு நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய முடியாது' : சிந்தியா

சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவரும், கடந்த பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்பட்டு வரும் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து இன்று வெளியேறியுள்ளார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

'காங்கிரசுக்குள் இருந்துகொண்டு நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய முடியாது' : சிந்தியா

மத்திய அமைச்சர், எம்.பி. உள்ளிட்ட பல பொறுப்புகளை சிந்தியா வகித்திருக்கிறார்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸிலிருந்து சிந்தியா விலகலால் தேசிய அரசியலில் பரபரப்பு
  • விலகலுக்கு முன்பாக பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்து பேசினார் சிந்தியா
  • சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் சிந்தியா பதிவிட்டுள்ளார்
New Delhi:

மத்தியப் பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக ஆளும் காங்கிரஸ் கட்சியில், மூத்த தலைவர் சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் பெங்களூருவுக்கு சென்று விட்டனர். அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அதன் பின்னர் ராஜினாமா கடிதத்தைச் சோனியா காந்தியிடம் அளித்துள்ளார்.

49 வயதாகும் சிந்தியா 4 முறை மத்தியப் பிரதேசத்தின் குனா மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர்

தற்போதுள்ள சூழலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளன. 

இதனால் 15 மாதங்கள் நீடித்த காங்கிரஸ் ஆட்சி விரைவில் மத்தியப் பிரதேசத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிந்தியா தனது நேற்றைய தேதியிட்ட  ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

இந்த கடிதத்தைச் சோனியா காந்தி ஏற்று, சிந்தியாவின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, சிந்தியா கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்படுவதாக மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சோனியா காந்திக்கு சிந்தியா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-

காங்கிரஸில் அடிப்படை உறுப்பினராகக் கடந்த 18 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறேன். இப்போது நான் வெளியேறும் நேரம் வந்து விட்டது. நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். 

கட்சியை விட்டு வெளியேறினாலும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறாது. காங்கிரசுக்குள் இனிமேலும் இருந்துகொண்டு அவற்றைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. 

இவ்வாறு சிந்தியா தனது கடிதத்தில் கூறியுள்ளார். 

.

சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவரும், கடந்த பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்பட்டு வரும் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து இன்று வெளியேறியுள்ளார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

2001-ல் சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து மகன் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இணைந்தார். 

சிந்தியாவின் குடும்பத்தினர் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த குவாலியர் மாகாணத்தை ஆட்சி செய்தவர்கள். அவரது உறவினர்களான வசுந்தரா ராஜே, யசோதரா ராஜே ஆகியோர் பாஜகவில் உள்ளனர். வசுந்தரா ராஜேவின் தாயாரான விஜயராஜே சிந்தியா பாஜகவை நிறுவிய தலைவர்களில் ஒருவர் ஆவார். வசுந்தராவின் மகன் துஷ்யந்த் பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ராஜினாமாவை வரவேற்றுள்ள யசோதரா ராஜே, 'மிகப்பெரிய அடியை ஜோதிராதித்யா எடுத்து வைத்துள்ளார். எனது அம்மாவின் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசிலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஜோதிராதித்ய சிந்தியாவின் தைரியமான முடிவை வரவேற்கிறேன்' என்று கூறியுள்ளார். 

.