Read in English
This Article is From Aug 19, 2019

’11 வினாடிகளில் 100மீ ஓட்டம்’: தடகள வீரரின் வாழ்க்கையை மாற்றிய வைரல் வீடியோ!

’வேக சோதனைக்காக’ போபாலில் உள்ள மைதானத்திற்கு ரமேஷ்வர் குர்ஜார் என்ற அந்த இளைஞர் மத்திய பிரதேச விளையாட்டுத்துறை அமைச்சரால் அழைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

கவாலியார் பகுதியில் உள்ள சிக்கந்தர்பூரை சேர்ந்தவர் ரமேஷ்வர் குர்ஜார்.

Bhopal:

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், 'வெறும் காலுடன் 100 மீட்டர் தொலைவை வெறும் 11 விநாடிகளில் கடுக்கும் வீடியோ' ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவருக்கு தற்போது அரசு உதவி செய்ய முன்வந்துள்ளது. 

ரமேஷ்வர் குர்ஜார் என்ற அந்த இளைஞர், 'வேக சோதனைக்காக' போபாலில் உள்ள மைதானத்திற்கு மத்திய பிரதேச விளையாட்டுத்துறை அமைச்சரால் அழைக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து இளைஞர் ரமேஷ்வர் குர்ஜார் கூறும்போது, உசைன் போல்ட்டை டிவியில் பார்க்கும் போதெல்லாம், இந்தியர்கள் ஏன் அவரது சாதனையை முறியடிக்க முடியாது என்று சிந்திப்பேன். அனைத்து வசதிகளும், உரிய பயிற்சியும் கிடைக்கும் பட்சத்தில் என்னால் அவரது சாதனையை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தபோது, காணாமல் போன தனது எருமை மாடுகளே தேடி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இளைஞர் ஒருவர் வெறும் காலுடன், சாலையில் 100 மீட்டர் தொலைவை வெறும் 11 விநாடிகளில் கடக்கும் வீடியோ ஒன்று இரண்டு நாட்களாக சமூகவலைதங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கண்களில் பட, அவர் அதை உடனடியாக தனது ட்வீட்டர் பதவில் ஷேர் செய்திருந்தார்.
 


அதனுடன், நம் இந்தியா இதுபோன்ற திறமைமிக்க இளைஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட்டால், புதிய வரலாற்றை படைப்பார். இந்த இளைஞருக்கு தேவையான ஆதரவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

சிவராஜ் சிங் சவுகானின் பதிவைக் கண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அந்த இளைஞரின் விவரங்களை அறிந்து அவரை உடனே என்னிடம் அழைத்துவாருங்கள். அவரை தடகள பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார். 
 

Advertisement