This Article is From Jul 28, 2019

100 ரூ முத்திரை தாளை அனுப்பி தலாக் சொன்ன கணவர்: புகார் அளித்த மனைவி

சந்தன் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு கேட்ட போது “இது கணவன் மனைவிக்கு இடையிலான தகராறு” என்று கூறினார்.

100 ரூ முத்திரை தாளை அனுப்பி தலாக் சொன்ன கணவர்: புகார் அளித்த மனைவி

தனக்கு இரண்டு மாத குழந்தை உள்ளது. நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.. (Representational image)

Indore:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரூ. 100 முத்திரை தாளில் தனக்கு தலாக் அனுப்பியதாக 34 வயதுடைய பெண்மணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்த பெண் சந்தன் நகரில் வசிக்கிறார் அவர் ஒரு நடிகை என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவர் முடசிர் பெய்க் (34) தனக்கு ரூ. 100 முத்திரை தாளை அனுப்பினா. இது அவரைப் பொறுத்தவரை திருமண பந்தத்திலிருந்து விடுவிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஒரு தலைப்பட்ச விவாகாரத்தை தான் ஏற்க மறுப்பதாக”அலினா என்று அழைக்கப்படும் ரேஸ்மா ஷேக் கூறினார்.

தான் 2016இல் முடசீருடன் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும். திருமணத்திற்கு பின் நடிப்பதில்லை என்றும் கூறினார். தனக்கு இரண்டு மாத குழந்தை உள்ளது. நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

சந்தன் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு கேட்ட போது “இது கணவன் மனைவிக்கு இடையிலான தகராறு” என்று கூறினார்.

பலமுறை முயற்சித்த போதிலும் முடசிர் பெய்க்கை தொடர்பு கொள்ள முடியவில்லை.
 

.