Read in English
This Article is From Jan 26, 2019

“இனி கலெக்டர் பேசுவார்”-குடியரசு தின விழாவில் பேச முடியாமல் தவித்த ம.பி அமைச்சர்

Republic Day 2019: எனக்கு கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லை. நீங்கள் வேண்டுமென்றால் என் டாக்டரிடம் கேளுங்கள். ஆனாலும் பரவாயில்லை, இனி கலெக்டர் இதை வாசிப்பார் என்று கூறி அமர்ந்துகொண்டார்.

Advertisement
இந்தியா

குவாலியரில் இளைஞர் காங்கிரஸில் பல பதவிகளை வகித்துள்ளார்

Gwalior, Madhya Pradesh:

மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சியில் நடந்து வருகிறது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரான இமர்த்தி தேவி குடியரசு தினத்தில் குவாலியரில் குடியரசு தின உரையாற்றாமல் தோல்வியுற்றார். 

கொடியேற்றிய பின் குடியரசு தின உரையின் சில வரிகளை மட்டும் வாசித்து விட்டு கலெக்டரிடம் ஒப்படைத்தார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

“ எனக்கு கடந்த 2 நாட்களாக உடல்நிலை சரியில்லை. நீங்கள் வேண்டுமென்றால் என் டாக்டரிடம் கேளுங்கள். ஆனாலும் பரவாயில்லை, இனி கலெக்டர் இதை வாசிப்பார்” என்று கூறி அமர்ந்துகொண்டார். அங்கிருந்த  கலெக்டர் உரையை முழுமையாக வாசித்து அவரைக் காப்பாற்றினார். காங்கிரஸ் கட்சிக்கு இமர்த்தி தேவி புதுமுகம் அல்ல. 

Advertisement

2008 மற்றும் 2013 ஆண்டு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். குவாலியரில் இளைஞர் காங்கிரஸில் பல பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(With inputs from ANI)

Advertisement
Advertisement