Read in English
This Article is From Mar 04, 2020

ம.பியில் கமல்நாத் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்திய 4 எம்எல்ஏக்கள்!

Madhya Pradesh: மொத்தம் 230 உறுப்பினர்கள் உள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் கமல்நாத் ஆட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான 116-ஐ விட 4 எம்எல்ஏக்கள் கூடுதலாகக் கொண்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • 4 எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிக்குள் இருக்கின்றனர்.
  • பாஜகவினர் பணம் கொடுக்க முயல்வதாக குற்றச்சாட்டு
  • விரைவில் 4 எம்எல்ஏக்களும் திரும்பி வருவார்கள்
New Delhi/Bhopal:

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் 15 மாத காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மிகக் குறைந்த பெரும்பான்மை வித்தியாசத்திலே இந்த ஆட்சி நடந்து வந்தது. அப்படி, இருக்க இன்று டெல்லி அருகிலுள்ள குர்கானில் ஒரு நட்சத்திர விடுதியில் எம்எல்ஏக்கள் குழு முகாமிட்டுள்ளதால், ஆட்சி விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனினும், நள்ளிரவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை மட்டும் அவரது பைகளுடன் அழைத்து வருவது காணப்பட்டது. 

இதுதொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய சிங் கூறும்போது, 4 எம்எல்ஏக்கள் இன்னும் விடுதிக்குள் தான் இருக்கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ராமாபாய் மட்டும் விடுதியை விட்டு வெளியே அழைத்து வர முடிந்தது என்று அவர் கூறினார். மத்தியப் பிரதேச அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஜித்து பாத்வாரி மற்றும் ஜெய்வர்தன் சிங் ஆகியோருடன் ராமாபாய் வெளியே வந்தார். 

பாஜக தடுத்து நிறுத்த முயன்றும் ராமாபாய் வெளியை வந்தார். எங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் எங்களுடன் வர தயாராக இருக்கின்றனர். பிசாஹுலால் சிங்குடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்றார். 

Advertisement

பாஜக தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயல்வதாக திக் விஜய சிங் குற்றம் சாட்டிய ஒரிருநாளில் எம்.எல்.ஏ.க்கள் குர்கானில் உள்ளனர். "பாஜகவின் ராம்பால் சிங், நரோட்டம் மிஸ்ரா, அரவிந்த் பகுதாரியா, சஞ்சய் பதக் உள்ளிட்டோர் அவர்களுக்குப் பணம் கொடுக்க சென்றுள்ளனர். அங்கு மட்டும் ஒரு சோதனை நடந்திருந்தால் அவர்கள் அனைவரும் பிடிபட்டிருப்பார்கள். 10 முதல் 11 எம்எல்ஏக்கள் அங்கு இருந்ததாக நாங்கள் நினைக்கிறோம், தற்போது இன்னும் நான்கு பேர் மட்டுமே அவர்களுடன் உள்ளனர். விரைவில், அவர்களும் எங்களிடம் திரும்பி வருவார்கள், "என்று அவர் இன்று கூறினார்.

மொத்த 231 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில், காங்கிரஸின் பலம் 114, பாஜக 107 ஆகும். மீதமுள்ள ஒன்பது இடங்களில் இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும், இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் எண்ணிக்கை ஐந்தாகவும் உள்ளது.

Advertisement

கடந்த ஆண்டு, ஜூலை மாதம் 24 அன்று, மத்தியப் பிரதேச எதிர்க்கட்சி தலைவரான கோபால் பார்கவா, “மேலிருந்து ஒரு உத்தரவு வந்தால் போதும், உங்கள் அரசாங்கம் 24 மணி நேரம் கூட உயிர்வாழாது" என்று மாநிலச் சட்டசபையில் கமல்நாத் அரசாங்கத்தைத் தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் மாநிலச் சட்டசபையில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டம் (மத்தியப் பிரதேச திருத்தம்) மசோதா மீதான விவாதத்தின் போது, ​​கமல்நாத் அரசு 122 வாக்குகளைப் பெற்றிருந்தது. 231 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலச் சட்டசபையில் 122 என்கிற எண்ணிக்கையானது பெரும்பான்மையை விட ஏழு அதிகமாகும்.

Advertisement