This Article is From Apr 14, 2019

கணவனை தோளில் சுமந்த பெண் - வீட்டை விட்டு ஓடிய பெண்ணுக்கு விநோத தண்டனை

அந்த வீடியோவில் அந்த பெண் கணவனை சுமந்து செல்ல அவள் முன்பு வயதான நபர் ஒரு ஆடி வருகிறார். சுற்றியுள்ள பலரும் அதை செல்போனில் வீடியோவாக எடுக்கின்றனர்.

கணவனை தோளில் சுமந்த பெண் - வீட்டை விட்டு ஓடிய பெண்ணுக்கு விநோத தண்டனை

இந்த சம்பவம் ஜஹபு மாவட்டத்தில் நடந்துள்ளது.

Bhopal:

பழங்குடியின திருமணமான 27 வயது பெண்ணொருவர் தான் காதலித்த நபருடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும் அவரைக் கண்டுபிடித்து அடித்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஜஹபு மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகளவு வசித்து வருகின்றனர். 

இந்த பெண் தன் கணவனை தோளில் வைத்து சுமந்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவர் சுமந்து செல்லும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பெண் கணவனை சுமந்து செல்ல  அவள் முன்பு வயதான நபர் ஒரு ஆடி வருகிறார். சுற்றியுள்ள பலரும் அதை செல்போனில் வீடியோவாக எடுக்கின்றனர். இதை ஏஎன் ஐ செய்தி நிறுவனம் இதன் வீடியோவை பகிர்ந்துள்ளது. 

அந்தப் பெண்ணின் கணவன் வீடு தேவிகாவில் உள்ளது. சில நாட்களுக்கு முன் குஜராத்துக்கு அந்தப் பெண் ஓடி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிகின்றனர். கணவன் வீட்டு சொந்தங்கள் இரண்டு நாளுக்கு முன்பு அந்தப் பெண்ணை கண்டுபிடித்து நேற்று கிராமத்திற்கு இழுத்து வந்துள்ளனர்.

கிராமத்தினர் கணவனை தோளில் சுமக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்துள்ளனர். இந்த வீடியோ வாட்ஸ் அப்களிலும் வெகுவாக பரவி வருகிறது. 

இந்த வழக்கை பதிவு செய்து 12 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போபால் எஸ்.பி வினித் ஜெயின் “ஒரு பெண் பொது இடத்தில் மனித நேயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள அனைவரையும் காவல்நிலையத்துக்க் கொண்டுவர உத்தரவிட்டுள்ளேன். இதற்காக கூடுதல் காவல்துறையினரை  அழைத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளதாக” தெரிவித்தார்.

.