This Article is From Aug 24, 2019

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்த பெண்

குழந்தையை பிரசவித்த பின்னர் உறவினர்கள் குழந்தையையும்  தாயையும் அழைத்து வந்ததாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அங்கு பணியில் இருந்த செவிலியர் தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்த பெண்

கர்ப்பிணிப் பெண் நடுரோட்டிலே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். (Representational)

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் கர்ப்பிணிப் பெண் நடுரோட்டிலே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கமலா பாய் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஏதும் வரவில்லை. பெண்ணின் கணவர் பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து அழைத்து வந்துள்ளார். ஆனால் நடுவழியிலே அந்தப் பெண் தன் குழந்தையைப் பெற்றெடுத்ததாக பெண்ணின் மாமியார் சந்திர பாய் தெரிவித்தார். 

கமலா பாய் அதன்பின் ஷாகாபூர் சமூக நலக்கூடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தையை பிரசவித்த பின்னர் உறவினர்கள் குழந்தையையும்  தாயையும் அழைத்து வந்ததாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அங்கு பணியில் இருந்த செவிலியர் தெரிவித்துள்ளார். 
 
.