This Article is From Aug 21, 2018

ஆர்கானிக் பொருட்கள் விற்க சான்று அவசியமா? மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சான்றுகள் பெறுவதற்கு அதிக செலவாகும் என்பதால், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

ஆர்கானிக் பொருட்கள் விற்க சான்று அவசியமா? மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் இராமசாமி என்ற விவசாயி, ஆர்கானிக் எனப்படும் இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து சான்று அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சான்றுகள் பெறுவதற்கு அதிக செலவாகும் என்பதால், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால், இந்த விதிகளை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு இந்த மனுவை இன்று விசாரித்தது. அதில், மத்திய வேளாண் துறை செயலாளருக்கும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கும் இது தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.