Read in English
This Article is From Aug 21, 2018

ஹோம் ஒர்க் தரக்கூடாது என்று விளம்பரப்படுத்துங்கள்: CBSE-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை பள்ளிப்பை, வீட்டுப்பாடம் கூடாது என்னும் அறிவுறுத்தலைப் பின்பற்றியே ஆகவேண்டும்

Advertisement
இந்தியா
Chennai:

ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது, மீறித் கொடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களில் விளம்பரப்படுத்துமாறு சிபிஎஸ்இ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்சிஇஆர்டி (NCERT) பரிந்துரைக்கும் புத்தகங்கள், பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் இவ்வுத்தரவை வழங்கினார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 2004 செப்டம்பர் 15, 2016 செப்டம்பர் 2012 ஆகிய தேதிகளில் '1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிகளுக்குத் தான் அனுப்பிய சுற்றறிக்கையின் நகலை சிபிஎஸ்இ சமர்ப்பித்தது.

Advertisement

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை பள்ளிப்பை, வீட்டுப்பாடம் கூடாது என்னும் அறிவுறுத்தலைப் பின்பற்றியே ஆகவேண்டும். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் வீட்டுப்பாடம் கூடாது என்றும் சிபிஎஸ்இ கோர்ட்டில் தெரிவித்தது.

மேலும், ' 1 - 8ஆம் வகுப்பு வரை என்சிஆர்டிதான் கல்விக்கான ஆணையம் என்றும் பள்ளிப்பையின் சுமையினையும் வீட்டுப்பாடங்களையும் குறைப்பதைத் தவறாமல் பள்ளிகள் பின்பற்ற வேண்டுமென்பதையும் மீண்டுமொரு கூறிக்கொள்கிறோம்' என சிபிஎஸ்இ நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Advertisement

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதனைச் செயல்படுத்தப்போவது எவ்வாறு எனக் கேள்வி எழுப்பினர்.

விதிகளை மீறுவது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டால் சிபிஎஸ்இ அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றபோது, அதனை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

Advertisement

"CBSE-ஐ மக்கள் ஓர் உயர்வான கல்வி வாரியமாகக் கருதுகிறார்கள். ஆனால் நீங்கள் இத்தகைய விதிமீறல்களைக் கண்டறியக் கூட ஏதும் அமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. நீங்களே கூறியதுபடி 18000 பள்ளிகள் சிபிஎஸ்இ கீழ் இயங்குகின்றன. ஆனால் வெறும் 1200 பணியாளர்களே சிபிஎஸ்இ-இல் பணிபுரிகின்றனர். இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு எப்படி விதிமீறல்களைக் கண்காணிப்பது" என நீதிபதி கடிந்துகொண்டார்.

Advertisement