ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளரின் மனுவைத் தள்ளுபடிசெய்த சென்னை உயர் நீதிமன்றம் 'ஊழல் ஒரு அலுவல் முறை ஆகிவிட்டது' எனச் சொல்லியிருக்கிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் பழனிமுத்து தாக்கல்செய்த கருணை மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட காவல் துறை தலைமை இயக்குநரின் முடிவு சரியானது எனத் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும் அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் என்பது மெதுவாக வளர்ந்து, இன்று அந்த அமைப்பின் அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது என்றும் நாகரிக சமூகத்தில் ஒரு விதிவிலக்காக இருந்த இது இன்று ஒரு அலுவல் முறையாகவும் மாறிவிட்டது என்றும் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். மாநில அரசு ஊழலைத் தடுக்கப் புதிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)