சென்னை: ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வின் தரவரிசை பட்டியலில் மாற்றங்கள் செய்து வெளியிட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
இந்த ஆண்டு மே 2ந் ஆம் தேதி நடைப்பெற்ற ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்ற லக்ஷ்மி ஶ்ரீ என்ற மாணவி,மதிப்பெண் மாற்றம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தேர்வு விதிமுறைகளின்படி தான் பதிலளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது. முழு எண் 11 என்பது சரியான பதிலாக இருந்தால், அதற்கு 11 என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்பது தேர்வு விதிமுறை. ஆனால், 11.0 மற்றும் 11.00 என இரண்டு டெசிமல் வரை பதிலளிக்கலாம் என சி.பி.எஸ்.இ இணையதளத்தின் விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், தேர்வு விதிமுறைகளை பின்பற்றாமல், இணையதளத்தில் வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தினால், தேர்வு விதிமுறைகளின் படி படித்து எழுதிய மாணவர்களுக்கும். தேர்வு விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்களுக்கும் ஒரே மதிப்பெண் அளிப்பது முறையாகது என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் லக்ஷ்மி ஶ்ரீ.
இதனை விசாரித்த நீதிபதி, தேர்வு விதிமுறைப்படி பதிலளித்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதனால் கான்பூர் ஐ.ஐ.டி, கவுன்சிலிங்கை நிறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
தரவரிசை பட்டியலில் தற்போது மாற்றம் செய்தால், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் குழப்பம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல், வழக்கு தொடர்ந்த மாணவிக்கு, அவர் விருப்பப்படி ஏற்கனவே சீட் கிடைத்துவிட்டது.
இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி தண்டபாணி ஆகியோர் ,தனி நீதிபதியின் உத்தரவுவை ரத்து செய்தனர்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)