இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகள் காணாமல் போயின என்று தொடரப்பட்ட வழக்கில் சரிவர பதில் அளிக்காத காரணத்தால், சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்துறை செயலருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பாரி முனை மற்றும் வால் டேக்ஸ் சாலை அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2 குழந்தைகள் காணாமல் போனதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்தான வழக்கு நீதிபதி எம்.சத்யநாரயணா தலைமையிலான டிவிஷன் பென்ச் முன்னர் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ‘இந்த வழக்கைப் பொறுத்தவரை மாநில அரசு, ஒரு சரியான அறிக்கையை நீதிமன்றத்திடம் இதுவரை சமர்பிக்கவில்லை. இந்த வழக்கின் வீரியம் தெரிந்து சம்பந்தப்பட்டத் துறைகள் நடக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளை தொலைத்து வாடும் பெற்றோர்களின் நிலையை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்’ என்று கூறி தமிழக உள்துறை செயலருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)